நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் சிங்கப்பூரில் வெளியானது!

 

‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அதேபோல், மொட்ட ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், ஜாக்குலின் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் உள்ள 600- க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று (பிப்.02) வெளியாகியுள்ளது.

அதிரடி சோதனை நடவடிக்கைகளில் சிக்கிய மூன்று நபர்கள்

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் பல்வேறு திரையரங்குகளிலும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இப்படம் சிங்கப்பூரில் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதன்படி, Cathay Jem, Cathay AMK hub, GV Yishun, GV CitySquare, We Cinemas Clementi, Shaw Theatre Waterway Point, Carnival Cinema Golden Mile Tower ஆகிய திரையரங்குகளில் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக திரையில் வெளியாகும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.