தேவையுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள இலவச மளிகை, உணவு பொருட்கள்…

Vikram Nair/Facebook

அட்மிரால்டி குடியிருப்பாளர் ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே, தேவை உள்ளோர் பயன்படும் வகையில் பல்வேறு பொருட்களை வைத்து ஏற்பாடு செய்துள்ளார்.

இல்லாதவர்களுக்கு தேவையானதை கொடுத்து உதவும்படி ஊக்குவிப்பு குறிப்பும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில், 8 மணிநேரம் தூங்குவதற்கு S$1,500 சம்பளம் – வேலை ரெடி!!

அதில், கை சுத்திகரிப்பு திரவியம், அரிசி, கேனில் அடைக்கப்பட்ட உணவு, பாக்கெட் பானங்கள், பாஸ்தா, பிஸ்கட் மற்றும் உடனடி நூடுல்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

அட்மிரால்டி MP விக்ரம் நாயரின் தொண்டூழிய குழு கூடுதல் பொருட்களை வழங்கியதாகவும் பேஸ்புக் பதிவில் அவர் பகிர்ந்து கொண்டார்.

மாலினி என்ற அந்த குடியிருப்பாளரின் பிளாக் லிப்ட் லாபியிலில் அடையாள குறிகள் இருப்பதாகவும், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் அதனை எளிதாக பார்த்து புரிந்துகொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள்.!