COVID-19: சிங்கப்பூர் அரசு மக்களுக்கு வழங்கிய அறிவுரை…!

The Government of Singapore is making some arrangements for the benefit of the people
The Government of Singapore is making some arrangements for the benefit of the people

உலகை அச்சுறுத்தும் COVID-19 கொடிய கிருமியிலிருந்து பாதிப்படையாமல் இருக்கவும், அதை வெற்றிப்பெறுவதற்கும் சிங்கப்பூர் அரசு மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

சில்லறை விற்பனைக் கடைகளில் பாதுகாப்பான இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பேரங்காடிகளிலும், கடைத்தொகுதிகளிலும், ஈரச்சந்தைகளிலும் உடல் வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படும் (தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய) என்றும் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் சாங்கி வில்லேஜ் ரோட்டில் அமைந்துள்ள உணவு கடையில் தீ…!

நீங்கள் பேரங்காடி/கடைத்தொகுதி/ஈரச்சந்தைக்குச் சென்றால்:

  • உங்களது அடையாள அட்டை அல்லது ஸ்கேன் செய்வதற்கு ஏதுவான குறியீடு கொண்ட புகைப்படத்தோடு கூடிய ஓர் அதிகாரத்துவ அடையாள அட்டையைக் கொண்டுசெல்லவும் (எ.கா. பேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம்)
  • எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணியவும்
  • தனியாகச் செல்லவும்
  • பாதுகாப்பான தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கவும்
  • பிறரிடமிருந்து குறைந்தது 1 மீட்டர் தூரத்தில் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 528 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!