மீண்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டிய நிறுவன இயக்குநர் மீது குற்றசாட்டு

Photo: Freepik

பங்குச் சந்தையில் இடம் பெற்றுள்ள “ஜியோ எனர்ஜி” நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சார்லஸ் ஆண்டனி மெலாட்டி (வயது 50) கடந்த மே மாதம் 15ம் தேதியன்று மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியுள்ளார்.

சிங்கப்பூர் நிரந்தரவாசியான இவர், ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் ஒருமுறை இதேபோல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதன் தொடர்பிலான விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் இல்லை.

விபச்சாரம் தொடர்பான குற்றங்களுக்காக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆடவருக்கு 16 மாத சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் முதல்முறையாக என்று நிரூபிக்கப்பட்டால் 10,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் இரண்டாம் முறை என்று நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஈராண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“எஸ்டிடி கோல் ரிசோர்சஸ்”, “குலோரி புரோஸ் டிரேடிங்”, “ஃபோர்ச்சியூன் கோல் ரிசோர்சஸ்” ஆகிய இதர 3 நிறுவனங்களில் சார்லஸ் ஆண்டனி மெலாட்டி இயக்குநராகப் பதவிவகிப்பதாக கணக்கியல் நிறுவனக் கட்டுபாட்டு ஆணையத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு தாக்குதல்: சிங்கப்பூர் கடும் கண்டனம்!