எந்தெந்த நாடுகளைச் சேர்ந்த பயணிகள் சிங்கப்பூருக்கு வரலாம்? – முழுமையான விவரங்கள்!

Changi Airport stole Woman arrested
Pic: TODAY

சிங்கப்பூர் அரசு, சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வருகிறது. உலக நாடுகளின் கொரோனா தடுப்பூசி விகிதம் மற்றும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் விகிதம் ஆகியவையை அடிப்படையாக கொண்டு நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட/குணமடைந்த ஊழியர்கள் மட்டுமே மீண்டும் பணியிடம் திரும்ப அனுமதி

அதன்படி, கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா, கனடா, ஸ்பெயின், பிரிட்டன், நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்ட பயணிகள், கடந்த அக்டோபர் 19- ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சிங்கப்பூர் சுகாதாரத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து விமான போக்குவரத்து இரு மார்க்கத்திலும் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ஜெர்மனி, புரூணை ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நவம்பர் 15- ஆம் தேதி முதல் தென்கொரியா நாட்டு பயணிகளும் சிங்கப்பூருக்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர்!

இதன் தொடர்ச்சியாக, நேற்று (23/10/2021) மேலும் சில நாட்டு பயணிகளுக்கு சிங்கப்பூர் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழுமையான விவரங்களைப் பார்ப்போம்

அந்த வகையில், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சிங்கப்பூர் அரசு, நான்கு பிரிவுகளாக பிரித்து பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டியலின் முதல் பிரிவில், ஹாங்காங், மக்காவ், மெயின்லாந்து சீனா, தைவான் ஆகிய நாடுகள் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கு சாங்கி விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர், பரிசோதனை முடிவு வரும் வரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் மேலும் 3,598 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி!

இரண்டாவது பிரிவில், ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பஹ்ரைன், பெல்ஜியம், பூடான், பின்லாந்து, கிரீஸ், நியூசிலாந்து, நார்வே, போலந்து, போர்ச்சுக்கல், துருக்கி, சுவிட்சர்லாந்து, சுவீடன், வாடிகன், அமெரிக்கா, பிரிட்டன், புரூணை, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், டென்மார்க், ஜப்பான், இத்தாலி, அயர்லாந்து உள்ளிட்ட 40 நாடுகள் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூருக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு, அதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வந்தவுடன் 7 நாட்கள் வீட்டில் இருந்து தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும். 7- வது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாவது பிரிவில், கம்போடியா, எகிப்து, இந்தோனேசியா, இஸ்ரேல், கத்தார், தென்னாப்பிரிக்கா, வியட்னாம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா உள்ளிட்ட 20 நாடுகள் இடம் பெற்றுள்ளனர். சிங்கப்பூருக்கு வருவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து, அதற்கான ‘நெகட்டிவ்’ சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும், அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வந்தவுடன் 10 நாட்கள் வீட்டில் இருந்து தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும். 10- வது நாளில் மீண்டும் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை விமான நிலையத்தில் அதிகரிக்கும் விமான சேவை – “சிங்கப்பூர் to சென்னை” விமானம் ரெடி

நான்காவது பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகிய 6 நாடுகள் இடம் பெற்றுள்ளனர். இந்த நாடுகளில் சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து அதற்கான் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் வந்தவுடன் 10 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 10- வது நாளில் மீண்டும் பிசிஆர் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

இந்தியா, வங்கதேசம், மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு 14 நாள் பயணம் மேற்கொண்ட அனைத்து பயணிகளும் சிங்கப்பூர் வழியாக செல்ல அல்லது நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய அறிவிப்புகள் வரும் அக்டோபர் 26- ஆம் தேதி அன்று நள்ளிரவு 11.59 PM மணி முதல் அமலுக்கு வருகிறது.

சிங்கப்பூரை தொற்று அடிப்படையில் அதிக ஆபத்துள்ள நாடாக அறிவித்த மேலும் ஒரு நாடு

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அரசின் https://safetravel.ica.gov.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணப் பாதைத் திட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்கு வரும் பயணிகள், அதற்கான பாஸ்- க்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.