சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு கடுமையாகும் சோதனை – டிசம்பர் 3 முதல் புதிய நடைமுறை

சிங்கப்பூர் விமானத் துறையில் சுமார் 4,300 க்கும் மேற்பட்ட வேலைகள்
Lean Jinghui

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளுக்கான சோதனை நெறிமுறைகளை சிங்கப்பூர் மேம்படுத்தும் என்று கூறியுள்ளது.

வரும் டிசம்பர் 3 முதல் அதனை செயல்படுத்தும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்தியா-சிங்கப்பூர் விமான சேவை: Omicron அச்சத்தின் மத்தியில் விமானங்களை இயக்கத் தொடங்கிய “விஸ்தாரா”

கூடுதலாக தகவல் கிடைக்கும் வரை கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாட்டைக் கண்டறிதல் மற்றும் தீவீரமான கட்டுப்பாடுகள் ஆகியவற்றை முடுக்கி விடுவதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது.

அனைத்து விமானப் பயணிகளும்

வகை I பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள் உட்பட, டிசம்பர் 3 (சிங்கப்பூர் நேரம்) முதல் சிங்கப்பூர் நுழையும் அல்லது வழியாக பயணிக்கும் அல்லது மாறும் அனைத்து விமானப் பயணிகளுக்கும் இது பொருந்தும்.

பயணிகள் சிங்கப்பூருக்குப் புறப்படும் இரண்டு நாட்களுக்குள், புறப்படுவதற்கு முந்தைய சோதனை (PDT) செய்து “நெகடிவ்” முடிவைப் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், வகை II (VTL அல்லாத), III மற்றும் IV நாடுகளைச் சேர்ந்த பயணிகள் உட்பட, சிங்கப்பூருக்குள் நுழைபவர்கள், PCR பரிசோதனையை வந்தவுடன் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போடப்பட்ட பயண திட்டத்தில் (VTL) டிசம்பர் 2ஆம் தேதி 23:59 மணிக்கு பிறகு வருபவர்கள் ART விரைவு சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

அவர்கள் வந்த பிறகு 3ஆம் நாள் மற்றும் 7ஆம் நாட்களில் விரைவு சோதனை நிலையங்களில் (Quick Test Centre) சோதனையை மேற்கொள்ள வேண்டும்.

சிங்கப்பூரில் இருந்து சிட்னி சென்ற இரண்டு பயணிகளுக்கு புதிய Omicron COVID-19 வகை உறுதி