தமிழக தொழில்துறை அமைச்சருடன் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

Photo: Minister Thangam Thenarasu Official Facebook Page

இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் சிமோன் வோங் (Simon Wong), நேற்று (18/04/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தமிழகத்தில் சிங்கப்பூர் நிறுவனங்கள் மேற்கொள்ளவிருக்கும் தொழில் முதலீடுகள் குறித்து அமைச்சர், தூதருடன் கலந்துரையாடினார்.

பெண்ணின் சக்கர நாற்காலியை எட்டி உதைத்து ரகளை செய்த கிளினிக் ஊழியர் – வீடியோ வைரல்: விசாரணை

இந்த சந்திப்பின் போது, சென்னையில் உள்ள துணைத் தூதர் போன் கோக் தியான் (Pon Kok Tian), தமிழக தொழில் துறையின் கூடுதல் தலைமைச்செயலர் மற்றும் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

தமிழகத்தில் தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்கப்பூர் தூதருடனான தமிழக அமைச்சரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.