COVID -19: வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு பொட்டலங்கள் வழங்கிவரும் அன்னலட்சுமி உணவகம்..!

Annalakshmi Restaurant serves more than 500 food parcels per day with the support of it's raining raincoats
Annalakshmi Restaurant serves more than 500 food parcels per day with the support of it's raining raincoats. (Photo: Annalakshmi, Facebook)

COVID -19 நோய் பரவல் நம்மை ஆட்டிப்படைத்துவரும் இந்த காலகட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது அன்னலட்சுமி உணவகம்.

சிங்கப்பூரில் கடந்த 34 ஆண்டுகளாக இயங்கி வரும் சைவ உணவகமான அன்னலட்சுமி, உணவு வழங்கும் சமூக தொண்டுக்காக பெயர் பெற்றது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் COVID-19 தொற்றிலிருந்து இதுவரை 10,000க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்..!

அன்னலட்சுமி உணவகம் “இட்ஸ் ரைனிங் ரைனிகோட்ஸ்” (it’s raining raincoats) என்ற சமூக நல அமைப்பின் ஆதரவில் நாளொன்றுக்கு 500க்கு மேற்பட்ட உணவு பொட்டலங்களை ஊழியர்களுக்கு வழங்குகிறது.

துவாஸ், பிடதாரி, புங்க்கோல், யிஷூன் மற்றும் டம்பைன்ஸில் அமைந்துள்ள தங்குமிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு அந்த உணவு வழங்கப்படுகிறது.

அதாவது ஏப்ரல் 20ல் தொடங்கிய இந்த சமூக நல முயற்சி அடுத்த மாதம் 1ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அன்னலட்சுமி உணவகத்தின் துணை செயல்பாட்டு நிர்வாகி திரு ஹரிஷ் மேனன் கூறியுள்ளார்.

மேலும், தொடக்கத்தில் பிடதாரி கட்டுமானதளத்தில் வசித்த ஏறத்தாழ 50 ஊழியர்களுக்கு உணவு வழங்க தொடங்கி காலப்போக்கில் உணவு தேவைகள் அதிகரிக்க தமது உணவு விநியோகத்தையும் அன்னலட்சுமி அதிகரித்தது என்றும் கூறியுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான இந்த முயற்சி ஒருபுறம் இருக்க, “ஸ்ரீ நாராயண மிஷன் சன் லவ்” இல்லம் ஆகிய தாதிமை இல்லங்களுக்கு வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வழங்குகிறது. வில்லிங் ஹார்ட்ஸ் என்ற அறநிறுவன அமைப்பின் முயற்சிகளுக்கும் கைகொடுத்து வருகின்றது அன்னலட்சுமி.

"Sri Narayana Mission Sun Love" home to over 1,000 food parcels weekly
“Sri Narayana Mission Sun Love” home to over 1,000 food parcels weekly

ஆடம்பர உணவாக இல்லாமல் இருந்தாலும் எளிதான இந்திய வீட்டு சாப்பாடு போன்று வழங்குகிறோம். கிருமித்தொற்று பிரச்சனை நிலவி வரும் இந்த காலகட்டத்தில் மனக்கலக்கமும், பயமும் இருக்கும் ஊழியர்களுக்கு வீட்டை நினைவு படுத்தும் இந்திய உணவு அவர்களுக்கு மன நிம்மதி தரும் தன்மை படைத்தது என்று அன்னலட்சுமி உணவத்தின் நிர்வாகி திரு சுரேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “தைரியமாக இருங்கள்” – சமூகத் தலைவர்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய பிரதமர் லீ வலியுறுத்தல்..!