“தைரியமாக இருங்கள்” – சமூகத் தலைவர்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடிய பிரதமர் லீ வலியுறுத்தல்..!

Prime Minister Lee participated in the fast with Malay Muslim leaders and community leaders By video conference
Prime Minister Lee participated in the fast with Malay Muslim leaders and community leaders By video conference. (PHOTO: LEE HSIEN LOONG/FACEBOOK)

மலாய் முஸ்லீம் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் காணொளி வழியாக கலந்துரையாடியதாக பிரதமர் லீ சியான் லூங் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

வைரஸ் பரவலை முறியடிப்பதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை குடும்பங்கள் எவ்வாறு சமாளிக்கின்றன என்பதை சமூகத்தலைவர்களிடம் பிரதமர் லீ கேட்டறிந்தார்.

இதையும் படிங்க : மாதாந்திர பயணச் சலுகை அட்டையில் பயன்படுத்தப்படாத தொகை திருப்பித்தரப்படும்..!

இம்மாதம் 24ஆம் தேதியன்று முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாட இருக்கின்றனர். அனால் வைரஸ் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் அடுத்தமாதம் 1ஆம் தேதியன்று நிறைவு பெறுகிறது. நோன்பு பெருநாளை கொண்டாடுவோருக்கு இது சிரமத்தை ஏற்படுத்தும் என்பதை அறிவதாக திரு லீ தெரிவித்தார்.

நோன்பு பெருநாள் நெருங்கிவரும் வேளையில் தொற்று காரணமாக வழக்கமாக களைகட்டும் கோலாகலமான கொண்டாட்டங்கள் இல்லாததை அவர் சுட்டிக்காட்டினார்.

நோன்பு பெருனை முன்னிட்டு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரின் வீடுகளுக்குச் செல்லக்கூடாது என்றும், ஒன்றுகூடுதல் கூடாது என்றும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

ஹஜ்ஜு யாத்திரையை அடுத்த ஆண்டுக்கு சிங்கப்பூர் யாத்திரீகர்கள் தள்ளி போடவேண்டும் என்றும் முயிஸ் தெரிவித்துள்ளது.

அந்த காணொளி மூலம் பிரதமர் லீ, மலாய் முஸ்லீம் தலைவைர்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் நோன்புத் துறப்பில் கலந்துகொண்டார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் அன்புக்குரியவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தியாகங்களை செய்துவருபவர்கள் தைரியமாக இருங்கள். ஒன்றிணைந்து நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் பலனளிக்கின்றன என்று பிரதமர் திரு லீ தெரிவித்தார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!