மாதாந்திர பயணச் சலுகை அட்டையில் பயன்படுத்தப்படாத தொகை திருப்பித்தரப்படும்..!

TransitLink, which manages public transport transactions, has announced that it has extended the period for refunding unused amounts in its monthly benefit card following the extension of its plan to break the germ spread.
TransitLink, which manages public transport transactions, has announced that it has extended the period for refunding unused amounts in its monthly benefit card following the extension of its plan to break the germ spread. (Photo: Mothership)

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நிறைவுபெறும் வரை MRT பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான மாதாந்திர பயணச் சலுகை அட்டையில் பயன்படுத்தப்படாத தொகை திருப்பித்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து பொது போக்குவரத்து பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் ட்ரான்சிட்லின்க் நிறுவனம் இந்த மாதாந்திர பயணச் சலுகை அட்டைகளில் பயன்படுத்தப்படாத தொகையைத் திருப்பித்தருவதற்கான காலகட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் புதிதாக 451 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

ஜூன் மாதம் 1ஆம் தேதி கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நிறைபெறுகிறது. இருப்பினும் பல கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பயண அட்டைகளில் பணம் நிரப்பும் அனைத்து இயந்திரங்களிலோ அல்லது ட்ரான்சிட்லின்க் கூடத்திலோ திருப்பிக்கொடுக்கப்படும் தொகையை ஜூன் மாதம் 2ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள முடியும். திருப்பிக் கொடுக்கப்படும் தொகை போக்குவரத்து மின் பற்றுச்சீட்டுகளாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பிக்கொடுக்கப்படும் தொகையைப் பயன்படுத்தி புதிய பயணச்சலுகை அட்டைகளை வாங்க விரும்புவோர் பயணச்சீட்டு அலுவலகம் அல்லது சலுகை அட்டை மாற்றும் அலுவலகத்திற்குச் செல்லலாம் என்று ட்ரான்சிட்லின்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயணச்சலுகை மாற்றும் அலுவலகங்கள் அட்மிரல்டி, புக்கிட் பாஞ்சாங்க், சாமர்செட் MRT நிலையங்களிலும் அங் மோ கியோ, சுவா சூ காங், ஹவ்காங்க, ஜூரோங்க் ஈஸ்ட், தெம்பனிஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ள பேருந்து நிலையங்களிலும் உள்ளன.

போனா விஸ்தாவில் இருக்கும் பயணச் சலுகை அட்டை மாற்றும் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உணவுப் பொட்டலங்கள்..!