தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு தனிமைப்படுத்தலில் விலக்கு உண்டா.? சுகாதார அமைச்சர் விளக்கம்.!

appeals received quarantine
Pic: Ong Ye Kung/FB

COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் மற்றும் மேல்நிலை வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் ஆகியோரிடமிருந்து தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு பெற எத்தனை முறையீடுகள் சமர்ப்பிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் (Mariam Jaafar) கேள்வி எழுப்பினார்.

இதற்கு, பதிலளித்த சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung), தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைவு என்றும், இருப்பினும், அவர்களுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால், சமூகத்திலுள்ள மற்ற நபர்களுக்கும் குறிப்பாக தடுப்பூசி போடாதவர்களுக்கும் நோய் பரவலாம் எனக் கூறினார்.

‘Sinovac’ கொரோனா தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட்டுள்ளது?- சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

சமூகத்தில் அதிகமான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வரை, COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் வந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்டதன் அடிப்படையில், தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறு விலக்கு கோருவதற்கு முறையீட்டு நடைமுறை எதுவும் இல்லை என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்தார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச Oximeter கருவி விநியோகம்; கடைகளில் மக்கள் கூட்டம்.!