ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச Oximeter கருவி விநியோகம்; கடைகளில் மக்கள் கூட்டம்.!

Temasek Foundation distribute oximeter
Pic: Temasek

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், ரத்தத்தின் உயிர்வாயு அளவை பரிசோதிக்கும் Oximeter கருவி இலவசமாக வழங்கப்பட உள்ளதாக Temasek நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.

ஜூலை மாதம் 3ம் தேதிக்குள், வீட்டிற்கு ஒரு Stay Prepared தாள் அனுப்பப்படும் என்றும், பின்னர் அதனை காட்டி, ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகள் மற்றும் மருந்தகங்களில் oximeter கருவியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என அந்நிறுவனம் கூறியிருந்தது.

சிங்கப்பூரில் இலவச Oximeter பெறும் துண்டுப் பிரசுரத்தை தொலைத்த குடியிருப்பாளர்கள்; கைவிரித்த Temasek நிறுவனம்.!

இலவச oximeter கருவியை பெற்றுக்கொள்ளும் முதல் நாளான நேற்று (ஜூலை 05), பேரங்காடிகள் மற்றும் மருந்துக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

சிங்கப்பூரில் உள்ள 300க்கும் மேற்பட்ட பேரங்காடிகளிலும், மருந்துக் கடைகளிலும் இலவச Oximeter கருவி வழங்கப்படுகின்றன. அடுத்த மாதம் 5ம் தேதி வரை மக்கள் அந்தக் கருவியை பெற்றுக்கொள்ளலாம்.

அதனை பயன்படுத்தும்போது, 90 முதல் 95 வரையிலான எண்கள் பதிவானால் மருத்துவ உதவி தேவை என்று அர்த்தம், அதற்கு குறைவான எண்கள் இருந்தால், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை தேவை எனவும் கூறப்பட்டுள்ளது.

தெம்பனீஸில் S$102,000க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் – இருவர் கைது