ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 13 சீரிஸ் போன்கள் அறிமுகம்: சிங்கப்பூரில் விலை என்ன?

Apple iPhone 13 series
Pic: EverythingApplePro

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்ச்சி நேற்று (14-09-2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் மினி மாடல்களில் துவங்கி, ஆப்பிள் வாட்ச் சீரிஸ், ஐபோன் 13, ஐபோன் 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 வகைகளில் செல்ஃபோனை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகிய மாடல்கள் 128 ஜி.பி, 256 ஜி.பி, 512 ஜி.பி மெமரியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 13 ப்ரோ மற்றும் 13 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றில் மேற்கூறியவற்றுடன் 1 டி.பி மெமரி மாடலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாடல்களிலும் முன்பக்கம் கேமரா 12 மெகா பிக்சல். 13 மற்றும் 13 மினி ஆகிய மாடல்களில் டூயல் 12 எம்பி வைடு மற்றும் அல்ட்ரா வைடு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் யார்யார் விடுதியை விட்டு லிட்டில் இந்தியா செல்ல முடியும் ? – அதனை யார் தேர்வு செய்வது?

புகைப்படங்களை துல்லியமாக எடுக்க முடியும் என்றும், அதிகபட்சமாக 28 மணிநேரம் வரை வீடியோக்களை தொடர்ச்சியாக பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் ஐபோன் 13 விலை 1,299 வெள்ளியிலிருந்து தொடங்கும் என்றும்,
ஐபோன் 13 ப்ரோ 1,649 வெள்ளி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் 1,799 வெள்ளி முதல் ஐபோன் 13 மினி 1,149 வெள்ளி முதல் விற்பனனக்கு வர உள்ளது.

சிங்கப்பூரில் வருகின்ற செப்டம்பர் 24ம் தேதி முதல் புதிய ரக ஐபோன்கள் விற்பனைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவுகள் செப்டம்பர் 17ம் தேதி இரவு 8 மணி முதல் தொடங்குகிறது.

‘சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான மிரட்டல் குறித்து நம்பகமான தகவல் இல்லை’