வெளிநாட்டு ஊழியர்கள் யார்யார் விடுதியை விட்டு லிட்டில் இந்தியா செல்ல முடியும் ? – அதனை யார் தேர்வு செய்வது?

(Photo: ROSLAN RAHMAN/AFP via Getty Images)

பைலட் திட்டத்தின்கீழ், லிட்டில் இந்தியாவுக்கு செல்வதற்கு தகுதியான ஊழியர்களைத் தங்கும் விடுதி ஆபரேட்டர்கள் தேர்வு செய்கின்றனர்.

இன்று (செப். 15) முதல், பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வாரமும் 500 ஊழியர்கள் லிட்டில் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

வருமானம் இன்றி தவித்த “லிட்டில் இந்தியா”…. விடுதி வெளிநாட்டு ஊழியர்கள் வருகை செய்தியால் மகிழ்ச்சி

தகுதியுடைய விடுதிகள்

வெளியே செல்லக்கூடிய தகுதியான ஊழியர்களைத் தேர்வு செய்யும் பொறுப்பு தங்கும் விடுதி ஆபரேட்டர்களுக்கு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மனிதவள அமைச்சகம் (MOM) இந்த திட்டத்தில் சேர்க்க எந்த விடுதிகள் தகுதியுடையது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப பட்டியலிடும் என்று வெளிநாட்டு ஊழியர் விடுதிகளை மேற்பார்வையிடும் MOMஇன் ACE குழுமத்தின் தலைவர் திரு டங் யு ஃபய் (Tung Yui Fai) கூறினார்.

கடைக்காரர்கள் பாதிப்பு

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக லிட்டில் இந்தியாவில் உள்ள கடைக்காரர்கள் போதிய வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவிட் -19 தொற்றுநோயின் விளைவாக வார இறுதிகளில் அந்த பகுதிக்கு வரும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் லிட்டில் இந்தியாவில் கடைக்காரர்கள் வருமானம் இன்றி பாதிக்கப்பட்டனர்.

தடுப்பூசி

லிட்டில் இந்தியாவுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் செல்வதற்கு முன்னதாக ஒரு நேர்காணலில், பைலட் திட்டம் எவ்வாறு செயல்படும், அடுத்த படிகள் எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஊழியர்கள் மட்டுமே இதில் தகுதியுடையவர்கள் என்று MOM கடந்த வாரம் கூறியது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு – MOM சோதனை நடவடிக்கை

எத்தனை பேர் செல்ல முடியும்

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆறு மணி நேரம் வரை லிட்டில் இந்தியாவுக்குச் செல்லலாம்.

ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, காலை மற்றும் பிற்பகல் என ஒவ்வொரு நேரத்திலும் சுமார் 80 ஊழியர்கள் வெளியே செல்ல முடியும்.

முந்தைய இரண்டு வாரங்களின் அடிப்படையில், கோவிட் -19 பாதிப்பு இல்லாத தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அங்கு குறைந்தபட்சம் 90 சதவிகிதம் தடுப்பூசி விகிதம் மற்றும் நல்ல பாதுகாப்பான வாழ்க்கை முறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“தகுதி சம்பளத்தை மேலும் உயர்த்தும் எண்ணம் இப்போதைக்கு இல்லை” – மனிதவள அமைச்சர்