‘சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான மிரட்டல் குறித்து நம்பகமான தகவல் இல்லை’

No imminent terrorist threat
Pic: Raj Nadarajan/TODAY

உத்தேசப் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன், ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் தென்கிழக்காசிய நாடுகளின் தூதரங்கள் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வழிப்பாட்டுத் தலங்கள் அல்லது கூட்ட நெரிசல் மிக்க இடங்களில், தற்கொலை தாக்குதல்கள் போன்றவை நடத்தப்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளதாக ஜப்பான் அதன் குடிமக்களிடம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஃபிலிப்பின்ஸ், தாய்லந்து, மியன்மார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஜப்பானிய குடிமக்களுக்கு அது பற்றிய ஆலோசனை அறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி!

இந்நிலையில், சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான மிரட்டல் குறித்த நம்பகமான தகவல் ஏதும் இல்லை என்று உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து குறிப்பிட்ட உளவுத் தகவல் ஏதும் இல்லை என ஜப்பானிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையிடம் கூறியுள்ளது.

இருப்பினும், தொடர்ந்து விழிப்புநிலையுடன் இருக்க வேண்டும் என்றும், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் பற்றி புகார் அளிக்குமாறும் சிங்கப்பூர் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்