சிங்கப்பூரில் தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி!

Island-wide PWS Sounding
Island-wide PWS Sounding (PHOTO: Reuters)

சிங்கப்பூரில் இன்று செப். 15 மாலை 6.20 மணிக்கு, தீவு முழுவதும் PWS சைரன்கள் மூலம் முக்கிய தகவல் சமிக்ஞையை சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை SCDF ஒலிக்கும்.

ஆண்டு தோறும் பிப்ரவரி 15 மற்றும் செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் மாலை 6.20 மணிக்கு தீவு முழுவதும் இந்த சமிக்ஞையை SCDF ஒலிக்கும்.

சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூட்டம்

SGSecure செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட கைப்பேசி மற்றும் silent அல்லது vibration தேர்வு செய்யாமல் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்த சமிக்ஞை ஒலிக்கும்.

முக்கிய தகவல் சமிக்ஞையை நீங்கள் கேட்கும்போது, ​​PWS பற்றி இரண்டு நிமிட செய்தியை பெற ஏதேனும் உள்ளூர் வானொலி நிலையம் அல்லது தொலைக்காட்சி சேனலுடன் உடனடியாக இணையுங்கள்.

இதனால் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் SCDF கூறியுள்ளது.

ஒலி எழுப்புவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், SCDF ஹாட்லைன் எண்ணை 1800 367 7233 அழைக்கவும்.

பெரிய ஆமையின் கழுத்தை கடித்து கிழித்து வேட்டையாடும் பெரிய உடும்பு