சிங்கப்பூரில் விறுவிறு விற்பனையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் உடைகள்!

Twitter Image

கத்தார் நாட்டில் நடைபெற்ற 22வது உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையைத் தட்டிச் சென்றது அர்ஜென்டினா அணி. சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பை கால்பந்துத் தொடரை அர்ஜென்டினா அணி கைப்பற்றியுள்ள நிலையில், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் மற்றும் மெஸ்ஸியின் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெகுநேரம் வெயிட் பண்ணும் பயணிகள்! – கிறிஸ்துமஸ்,புத்தாண்டு விடுமுறை!

குறிப்பாக, அர்ஜென்டினா நாட்டின் அனைத்து பகுதிகளில் வெற்றிக் கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன. இதனால் அர்ஜென்டினா நாட்டில் இன்று (20/12/2022) ஒரு நாள் அரசு பொதுவிடுமுறையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதேபோல், அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜெர்சி எனப்படும் உடைகளுக்கு உலகம் முழுவதும் மவுசுக் கூடியுள்ளது என்றே கூறலாம்.

உலகம் முழுவதும் உள்ள அர்ஜென்டினா கால்பந்து அணியின் ரசிகர்கள், அந்த அணியின் உடைகளை வாங்கி ,அணிந்துக் கொண்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூரில் உள்ள கால்பந்து ரசிகர்கள் அர்ஜென்டினா கால்பந்து அணியின் வெற்றியைக் கொண்டாடி வரும் நிலையில், லிட்டில் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துணிக்கடைகளில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் உடைகளை வாங்க குவிந்து வருகின்றனர்; விற்பனையானது சூடுபிடித்துள்ளது.

தெம்பனீஸில் போலீஸ் அதிரடி சோதனை – பெண் ஒருவர் கைது

இதனால் ஒரு சில கடைகளில் அர்ஜென்டினா அணியின் உடைகளின் விற்பனை முடிந்துவிட்டதாகவும், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் புதிய ஆர்டர்களைக் கொடுத்துள்ளதாகவும், அடுத்தாண்டு ஜனவரி தொடக்கத்தில் அவை வந்து சேரும் என்றும் கடைக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிங்கப்பூரில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் உடைகளின் விலை அதிகரிக்கும் என்று துணிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர்