இணையத்தில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்கிய 5 வெளிநாட்டவர்கள் கைது

(PHOTO: WALB)

இணைய விற்பனையாளர்களிடமிருந்து தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்கிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கிய இரண்டு வார சோதனை நடவடிக்கையில், இரண்டு மலேசியர்களும் மூன்று சீன நாட்டினரும் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதான எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கம்!

இந்த சோதனை நடவடிக்கையில் மொத்தம் 38 அட்டைப்பெட்டிகள் மற்றும் 74 பாக்கெட் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத்துறை பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது.

ஒரு வழக்கில், அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததற்காக மூன்று சிங்கப்பூரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அது தெரிவித்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

(PHOTO: Facebook/Singapore Customs)

கடமை செலுத்தப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்பவரோடு இந்த கைது நடவடிக்கை நிறுத்தப்படாது என்று சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இணையத்தில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் விற்பனை செய்தவர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…