ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதான எண்ணிக்கை கட்டுப்பாடு நீக்கம்!

(PHOTO: Roslan Rahman / AFP)

சிங்கப்பூரில் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீதான எண்ணிக்கையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டத்தில், வாகனங்களில் அதிகமான ஊழியர்களை ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்தும்கூட வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொடரும் அன்பளிப்புகள்!

அதில் ஊழியர்களை சுமந்து செல்லும் வாகனங்களின் திறனில், முன்பு குறைக்கப்பட்ட 25 சதவீத அளவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOH) மற்றும் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளன.

கடந்த மே மாத இறுதியில் அதிகபட்ச பயணிகள் எண்ணிக்கை அளவை குறைப்பதாக அவைகள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!

பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்

பிற பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தில் உள்ள எல்லா நேரங்களிலும் ஊழியர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும்.

அதில் இருக்கும்போது பேசவோ கலந்துரையாடவோ கூடாது என்றும் MOM கூறியுள்ளது.

தனியார் போக்குவரத்து

தங்கும் விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்களை அவர்களின் பணியிடங்களுக்குச் செல்வதற்கும் வெளியே செல்வதற்கும் முதலாளிகள் தொடர்ந்து தனியார் போக்குவரத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அந்த வாகனங்களில் வேறு எந்த பயணிகளையும் ஏற்றிச் செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சமூகத்திற்கும் இடையில் ஏற்படும் நோய்த்தொற்றுகளைத் தடுக்க இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் நாளை தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…