சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் நாளை தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

Singapore Phase 3 need know
(PHOTO: Reuters)

சிங்கப்பூரின் அதிரடி திட்டத்திற்கு பிந்தைய 3ஆம் கட்டம், நாளை டிசம்பர் 28 முதல் துவங்க உள்ளது.

என்னென்ன மாற்றங்கள், கட்டுப்பாடு தளர்வுகள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்து காண்போம்.

இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகளுக்கு கூடுதல் விமானங்கள்!

சமூக கூட்டங்கள்

மூன்றாம் கட்டத்தில் எட்டு பேர் வரை பொது இடங்களில் ஒன்று கூட அனுமதிக்கப்படும்.

முந்தைய உச்ச வரம்பு 5 நபர்களிலிருந்து தற்போது 8ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில், எந்த நேரத்திலும் எட்டு வருகையாளர்கள் வரை உள்ளே அனுமதிக்கலாம்.

மேலும், விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் எட்டு பேர் வரை அனுமதிக்கப்படும்.

இருப்பினும், நோய் பரவுவதற்கான வாய்ப்பைக் குறைக்க, சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து தங்கள் தொடர்புகளை சிறிய குழுவாக வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மால்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அனுமதி

பல அமைச்சகங்களுக்கு இடையேயான பணிக்குழு படிப்படியாக மால்களின் அதிகபட்ச அனுமதி அளவை அதிகரிக்கும்.

மால்கள் மற்றும் பெரிய கடைகளுக்கு அனுமதி, 10 சதுர மீட்டருக்கு ஒருவர் என்ற அளவில் இருந்து எட்டு சதுர மீட்டருக்கு ஒருவர் என்று அதிகரிக்கும்.

சுற்றுலா தலங்களுக்கு அனுமதி 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்த சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

பிரபலமான இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்க நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும்.

பதிவு தொடரும்…

விருப்பமில்லாத மோசடி செய்திகள் / விளம்பரங்கள் பற்றிய கவலையா? தீர்வு இதோ..

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…