விருப்பமில்லாத மோசடி செய்திகள் / விளம்பரங்கள் பற்றிய கவலையா? தீர்வு இதோ..

Singapore police WhatsApp Report
Report unwanted messages such as financial promos on WhatsApp (PHOTO: Facebook)

உங்களுக்கு விருப்பமில்லாத மோசடி குறித்த செய்திகள் அல்லது விளம்பரங்களைப் பெறுவதில் கவலையாக இருந்தால், அதற்கான நல்ல செய்தி இதோ.

வழக்கமான SMS அல்லது தொலைபேசி அழைப்புகளைப் போலவே, வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர்களும் நிதி தொடர்பான சலுகைகள் அல்லது விளம்பரங்கள் போன்ற தேவையற்ற செய்திகளை அனுப்புவோர் பற்றி புகாரளிக்கலாம்.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: வழிபாட்டுத் தலங்களில் என்னென்ன மாற்றங்கள்?

வாட்ஸ்அப் மற்றும் சிங்கப்பூர் காவல்துறையினர் இணைந்து வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு ஒன்றில், இந்த மோசடி செய்தி குறித்து புகாரளிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு புகாரளிக்கும் போது, அந்த ​​தளம் அவர்களின் புகாரளிக்கப்பட்ட தனிப்பட்ட கணக்கை உற்று நோக்க தொடங்கும்.

பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் கணக்குகளில் இதுபோன்ற மீறல்கள் காணப்பட்டால், அந்த கணக்கிற்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் messenger-ல் ஒருவரை பற்றி புகாரளிக்க, அந்த உரையாடலைத் திறந்து “Something’s wrong” என்பதை நிறுவ வேண்டும்.

“Something’s wrong” என்பதை அழுத்தி, அந்த உரையாடலைப் பற்றி புகாரளிக்க முடியும்.

“தடுப்பூசி கிடைப்பது கிருமிதொற்றுக்கான இறுதி முடிவில்லை”

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…