“தடுப்பூசி கிடைப்பது கிருமிதொற்றுக்கான இறுதி முடிவில்லை”

Covid-19 not eradicated like Sars - NCID
Covid-19 not likely to be eradicated like Sars, NCID chief says (Photo by Roslan RAHMAN / AFP)

கோவிட்-19 தொற்றிற்கு முந்தைய காலத்திற்கு வாழ்க்கை திரும்பாது என்று தேசிய தொற்று நோய்களுக்கான தடுப்பு நிலையத்தின் (NCID) நிர்வாக இயக்குனர் பேராசிரியர் லியோ யீ சின் (Leo Yee Sin) தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த 2021ல் தடுப்பூசி கிடைப்பது தொற்று முடிவுக்கான இறுதி வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை சிறப்பு பரிசுகள்!

அடுத்த ஆண்டு தொற்றுநோய் எவ்வாறு இருக்கும் என்பது குறித்த TODAY கேள்விகளுக்கு பதிலளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றை ஏற்படுத்தும் “Sars-Cov-2 கொரோனா வைரஸ்” எவ்வாறு உருமாறும் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை. ஆனால் அதன் தன்மைகளைப் பொறுத்தவரை, அது மனித வாழ்க்கைச் சூழலில் நிலைத்திருக்கக்கூடும் என்றார்.

“வேறுவிதமாகக் கூறினால், 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கிருமியைப் போல இந்த கொரோனா கிருமித்தொற்றை அழிக்க பெரும்பாலும் முடியாது” என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய மாதங்களில் சிங்கப்பூரில் குறைந்த அளவிலான சமூக பரவல் மற்றும் கோவிட் -19 தொடர்பான இறப்பு விகிதம் இருந்து வருகிறது.

இருப்பினும், உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, இந்த கோவிட் -19 தொற்று உலகளவில் சுமார் 75 மில்லியனுக்கும் அதிகமான மக்களை தொற்றியுள்ளது, அதனால் சுமார் 1.6 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இறந்ததாக கூறுகிறது.

உலகின் பிற பகுதிகளிலும் கிருமி தொடர்ந்து பரவி வரும் வரை, சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பேராசிரியர் லியோ எச்சரித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பொதுமக்கள் முகக்கவசங்களை அணிவது, பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகிய நடைமுறைகளைக் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் 249 கிராம் தங்கம் பறிமுதல்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…