சிங்கப்பூரின் 3ஆம் கட்டம்: வழிபாட்டுத் தலங்களில் என்னென்ன மாற்றங்கள்?

Singapore Phase 3 worship services
(PHOTO: visit Singapore)

சிங்கப்பூரின் 3ஆம் கட்டத்தில், அதாவது வரும் திங்கள்கிழமை முதல் 250 பேர் வரை வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கலாச்சார, சமூகம் மற்றும் இளையர்துறை அமைச்சகம் (MCCY) இன்று சனிக்கிழமை (டிசம்பர் 26) தெரிவித்துள்ளது.

இது தற்போதைய உச்சவரம்பான 100லிருந்து 250க்கு அதிகரிப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசி கிடைப்பது கிருமிதொற்றுக்கான இறுதி முடிவில்லை”

இந்த 250 பேரில் சமய மற்றும் துணை ஊழியர்கள் அடங்க மாட்டார்கள், இருப்பினும் அவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சமாக இருக்க வேண்டும் என்றும் MCCY தெரிவித்துள்ளது.

தேவையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளுடன், வழிபாட்டு சேவைகளின் போது நேரடி இசைக்கும் அனுமதிக்கப்படும்.

3ஆம் கட்டத்தின் கீழ், தற்போதைய ஐந்து பேரில் இருந்து எட்டு பேர் வரை பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படும்.

50 பேருக்கு மேல் உள்ள சபை நிகழ்வுகளுக்கு, தலா 50 பேர் கொண்ட குழுக்களாக வழிபாட்டாளர்களை பிரிக்க வேண்டும் என்று MCCY கூறியுள்ளது.

புனித புத்தகங்கள், பிரார்த்தனை பாய்கள் போன்ற பொதுவான பொருட்களைப் பகிர்ந்து கொள்ள அனுமதி இல்லை.

தற்போதுள்ள அனைத்து நபர்களும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிய வேண்டும். எனினும், வழிபாட்டுச் சேவையில் ஈடுபடும் 10 பேர் வரை மட்டும் முகக்கவசத்தை அகற்றலாம்.

மேலும், வழிபாட்டு சேவையின் போது பார்வையாளர்கள் பாட அனுமதி கிடையாது.

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பண்டிகை சிறப்பு பரிசுகள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…