சிங்கப்பூரில் 2021 முதல் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிப்பு!

வரும் ஜனவரி 1, 2021 முதல், சிங்கப்பூரில் புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1, 2020 நிலவரப்படி, அன்றிலிருந்து குறைந்தபட்ச வயது வரம்பு 20ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் ஊழியர் இறந்த நிலையில் கண்டெடுப்பு – காவல்துறை விசாரணை

ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்போர் வயது வரம்பில் படிப்படியான அதிகரிப்பு என்பது சுகாதார அமைச்சின் (MOH) புகை எதிர்ப்பு சட்டங்களின் ஒரு பகுதியாகும்.

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதன் மூலம் சிங்கப்பூர் இளைஞர்கள் புகைபிடிப்பதைத் தடுப்பதையும், குறிப்பாக 21 வயதிற்குட்பட்டவர்கள் புகைபிடிப்பதை தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று MOH கூறியுள்ளது.

அபராதம்

குறைந்தபட்ச வயது வரம்பிற்கு கீழுள்ள எந்தவொரு நபருக்கும், புகையிலை பொருட்களையும் விற்கும் சில்லறை விற்பனையாளர்களின் முதல் குற்றத்திற்கு S$5,000 மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, முதல் குற்றத்திற்காக அவர்களின் உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும், மேலும் அடுத்தடுத்த குற்றத்திற்கு உரிமம் ரத்து செய்யப்படும்.

குறைந்தபட்ச வயதிற்குட்பட்ட ஒருவருக்கு புகையிலைபொருட்கள் கொடுத்து நீங்கள் சிக்கினால், முதல் குற்றத்திற்கு S$500 மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு S$1,000 அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 30 முதல் தடுப்பூசி போடப்படும்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…