சிங்கப்பூரில் வரும் டிசம்பர் 30 முதல் தடுப்பூசி போடப்படும்!

COVID-19 Singapore accepts recommendations
COVID-19: Government accepts committee's recommendations (PHOTO: Matthias Ang)

சிங்கப்பூரின் COVID-19 தடுப்பூசி குறித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொண்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 27) தெரிவித்துள்ளது.

முதலில், டிசம்பர் 30 முதல் சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யீஷூன் அவென்யூ 1ல் இரண்டு லாரிகள் மோதி விபத்து

அதாவது தேசியத் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் (NCID) பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். பின்னர், வரும் வாரங்களில் அதிகமான சுகாதார நிறுவனங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பப்படும்.

சமூக மருத்துவமனைகள், பாலிக்ளினிக்ஸ் உட்பட பொது சுகாதார மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், படிப்படியாக ஊழியர்களுக்கு அவர்கள் பணி செய்யும் அந்தந்த வளாகத்திற்குள் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்படும் என்று MOH கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, தடுப்பூசி போடுவதற்கு மருத்துவ தகுதி வாய்ந்த பிற சிங்கப்பூரர்கள் மற்றும் நீண்டகால குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

கூடுதல் விவரங்கள் உரிய நேரத்தில் பகிரப்படும் என்று MOH கூறியுள்ளது.

இந்த தடுப்பூசி அனைத்து சிங்கப்பூரர்களுக்கும், நீண்ட கால வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் உட்பட நீண்டகால குடியிருப்பாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஊழியர் ஒருவரை தாக்கி தரையில் இழுத்துச்சென்ற காணொளி வைரல்… ஆடவர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…