ஊழியர் ஒருவரை தாக்கி தரையில் இழுத்துச்சென்ற காணொளி வைரல்… ஆடவர் கைது!

Domino West Coast arrested

டோமினோவின் கடை ஊழியர் ஒருவரை மற்றொரு ஆடவர் தாக்கும் காணொளி வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆன்லைனில் பரப்பப்பட்ட அந்த சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகளில், சிவப்பு கையில்லா பனியன் அணிந்த ஆடவர் ஒருவர் மீண்டும் மீண்டும் அந்த ஊழியரை தலையில் குத்துவதையும், தரையில் இழுத்து செல்வதையும் காணலாம்.

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி அதிகமானோருக்கு தேவைப்படலாம்!

தாக்குதல் நடத்தியவர் மீண்டும் மீண்டும் சண்டையில் ஈடுபடும் நோக்கில் அவரை தாக்குவதையும் காணமுடிகிறது.

இருப்பினும், டோமினோவின் ஊழியர் திருப்பி பதில் தாக்குதல் எதுவும் மேற்கொள்ளவில்லை.

அந்த காணொளியில் மற்ற ஊழியர்கள் யாரும் தலையிடுவதாகத் தெரியவில்லை, மேலும் தாக்குதல் நடத்தியவர் தலைமுடியை பிடித்து ஊழியரை இழுத்துச் செல்வதையும் காணமுடிகிறது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிச. 25) 505 வெஸ்ட் கோஸ்ட் டிரைவில் இந்த சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. பிற்பகல் 3.39 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

பின்னர், 23 வயது இளைஞரை இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் சுயநினைவில் இருந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த மோசமான செயலுக்காக 39 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் நாளை தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…