சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி அதிகமானோருக்கு தேவைப்படலாம்!

COVID-19 Vaccine Singapore
(PHOTO: REUTERS/Dado Ruvic/Illustration)

சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

புதிய வகை கிருமித்தொற்று பிரிட்டனில் பரவி வரும் சூழலில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிங்கப்பூரின் 3ஆம் கட்டம் நாளை தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டியவை!

அதே போல சிங்கப்பூரிலும், பிரிட்டனுக்கு அண்மையில் பயணம் செய்த நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் குறுகிய கால வருகையாளர்கள் கடந்த டிசம்பர் 23 இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதில் B117 என்னும் புதிய வகை கிருமித்தொற்று பல நாடுகளில் பரவி வரும் சூழலில், சிங்கப்பூரில் குறைந்தது 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹொக் பொதுச் சுகாதார பள்ளியின் தலைவர் பேராசிரியர் டியொயிக் யிங் கூறியுள்ளார்.

சிங்கப்பூர், பிரிட்டனில் பரவும் புதுவகை COVID-19 கிருமித்தொற்றின் முதல் சம்பவத்தை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

சென்ற புதன்கிழமை பிரிட்டனில் இருந்து சிங்கப்பூர் வந்த 17 வயதான பெண் ஒருவர் B117 என்னும் புதிய வகை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-சிங்கப்பூர் இடையே பயணிகளுக்கு கூடுதல் விமானங்கள்!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…