சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட இரு வெளிநாட்டவர்கள் – ஓரமாய் நின்னு வேடிக்கை பார்த்து அலேகா தூக்கிய அதிகாரிகள்!

SINGAPORE CUSTOMS

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கடந்த புதன்கிழமை (பிப். 23) இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 1,600 க்கும் அதிகமான வரி செலுத்தப்படாத சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டதாக அது கூறியுள்ளது.

“ஊழியரின் விரலை கடித்து துப்பிய சக ஊழியர்” – இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு சிறை

மார்சிலிங் கிரசென்ட் கனரக வாகன நிறுத்துமிடத்தின் அருகில் ஒரு டிரக்கில் இருந்து வேனுக்கு கருப்பு பைகளில் பொருட்களை மாற்றுவதை சுங்க அதிகாரிகள் கவனித்தனர்.

அதனை அடுத்து அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்தபோது, ​​சுமார் 1,636 அட்டைப்பெட்டிகள் மற்றும் 80 பாக்கெட்டுகள் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனை சிங்கப்பூர் சுங்கத் துறை இன்று சனிக்கிழமை (பிப். 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் சுமார் S$140,390 வரி ஏய்ப்பும் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஏய்ப்பு சுமார் $11,170 செய்யப்பட்டுள்ளதகா கூறியுள்ளது சுங்கத் துறை.

பின்னர், சிகரெட் பாக்கெட்டுகள், அட்டைப்பெட்டிகள், வேன் மற்றும் டிரக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 32 மற்றும் 42 வயதுடைய சீன ஆண்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூர் இருசக்கர வாகனத்தில் செல்ல முடியுமா? இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே!