சிங்கப்பூரில் அனைவருக்கும் இலவசம்… அருமை திட்டம்; இது கண்டிப்பா உதவும்!

ART kits household free
Syahindah Ishak

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 10 ART சோதனை கருவிகளை அஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

அதாவது வரும் ஜூலை 18 முதல் இந்த இலவச ART சோதனை கருவிகளை பெற்றுக்கொள்ளலாம். முதன்முதலில் இந்த இலவச விநியோக திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் அறிவித்தார்.

உணவகம் வெளியே அடித்துக்கொண்ட இரு பெண்கள் (Video): சிரிப்பதா.. வருத்தப்படுவதா… – நெட்டிசன்கள் கருத்து

அதிக எண்ணிக்கையிலான சோதனை கருவிகள் விநியோகிக்கப்படுவதால், சில குடும்பங்கள் தங்களுக்கான கருவிகளைப் பெறுவதில் சில வார கால தாமதம் ஏற்படலாம் என்று சுகாதார அமைச்சகம் (MOH) பேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

கோவிட்-19 தொற்று குறித்து உங்களுக்கு அச்சம் இருந்தால், தொற்றுநோயைக் கண்டறிய உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் MOH கூறியுள்ளது.

இந்த இலவச திட்டம் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கவும், நோய் பரவுவதைத் தடுக்கவும் உதவும் என கூறியுள்ளது MOH.

கிளப்பில் “கும்பல் வாசகம்” சொன்ன ஆடவர்.. கிளர்ந்தெழுந்த மக்கள்; தொடங்கிய அடிபிடி சண்டை