கிளப்பில் “கும்பல் வாசகம்” சொன்ன ஆடவர்.. கிளர்ந்தெழுந்த மக்கள்; தொடங்கிய அடிபிடி சண்டை

gang poem fight
Stomp

கிளப் வோக்ஸில் (Club Vox) ஏற்பட்ட சண்டையை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கிளார்க் கீயில் அருகில் Magazine சாலையில் உள்ள சென்ட்ரல் மாலில் கிளப் வோக்ஸ் அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஊழியர் மரணம்; தொடர் மரணம்… அச்சத்தில் உறையும் வெளிநாட்டு ஊழியர்கள்

ஆடவர் ஒருவரால் தொடங்கிய இந்த சண்டை இரவு 2.50 மணி வரை நடந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறினார்.

கடந்த ஜூலை 11 அன்று நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படங்களைப் ஸ்டாம்ப் வாசகர் பகிர்ந்துள்ளார்.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் குடித்துக்கொண்டிருந்த தருணம், ஆடவர் ஒருவர் ஏதோ கும்பல் வாசகத்தை சொல்லத் தொடங்கினார், இதனால் சுற்றியுள்ள மக்கள் கிளர்ச்சி அடைந்ததாக ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

அதன் பின்னர் சண்டை தொடங்கியது என்றும், இரு குழுக்களும் கிளப்பின் பவுன்சரால் வெளியேற்றப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் போலீசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்றார் அவர்.

பின்னர் அந்த குழுக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது என்றும், மேலும் போலீஸ் உதவி அங்கு தேவைப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

20 பேருடன் சென்ற பேருந்து… 15 பேர் சிங்கப்பூர் பயணிகள்: லாரி – பேருந்து மோதி விபத்து