உணவகம் வெளியே அடித்துக்கொண்ட இரு பெண்கள் (Video): சிரிப்பதா.. வருத்தப்படுவதா… – நெட்டிசன்கள் கருத்து

Bukit Merah fight viral video

புக்கிட் மேரா வியூ மார்க்கெட் மற்றும் உணவங்காடி நிலையத்திற்கு வெளியே பெண்களுக்குள் ஏற்பட்ட சண்டை வைரல் ஆனது.

இது பலருக்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும், இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பாக பொது இடங்களில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.

கிளப்பில் “கும்பல் வாசகம்” சொன்ன ஆடவர்.. கிளர்ந்தெழுந்த மக்கள்; தொடங்கிய அடிபிடி சண்டை

இந்த சண்டைக்கு பின்னர் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் இரண்டு வீடியோக்கள் இணையத்தில் வெளியாகின.

வயதான பெண் மற்றும் இளம் வயது பெண் இருவருக்கு இடையே இந்த சண்டை நடந்ததாக தெரிகிறது. ஆண் ஒருவர் வயதான பெண்ணை விலக்கி அங்கிருந்து கூட்டிச் செல்ல முயல்வதையும் காணமுடிந்தது.

ஒரு கட்டத்தில், இளம் பெண் திடீரென அந்த ஆடவரின் தலையில் பின்னால் இருந்து அடிப்பதையும் வீடியோவில் காண முடிகிறது.

இந்த சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக 49 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரில் வேலையிட விபத்தில் ஊழியர் மரணம்; தொடர் மரணம்… அச்சத்தில் உறையும் வெளிநாட்டு ஊழியர்கள்