முதலாளியிடம் இருந்து ‘ATM’ கார்டைத் திருடி பணம் எடுத்த பணிப்பெண்… சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்!

சுபாஸ் நாயருக்கு சிறைத்தண்டனை
Pic: File/Today

சிங்கப்பூரில் வசித்து வருபவர் யே பெய் ஹுங் (Yeh Pei Hoong) (வயது 49). சிங்கப்பூரரான இவர், தனது கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், லேசான ‘Dementia’ என்ற நியாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள 82 வயதான தன்னுடைய தாயார் கோ ஜெக் கியோவை (Goh Gek Keow) பார்த்துக் கொள்வதற்காகவும், அவரை நன்கு கவனித்துக் கொள்வதற்காகவும், பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 42 வயதான ‘Wimie Pascual Gubaton’ என்ற பணிப்பெண்ணை பணியமர்த்தினார்.

புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!

அந்த பணிப்பெண்ணை யே பெய் ஹுங் குடும்பத்தினர் நன்றாகப் பார்த்துக் கொண்டனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸில் உள்ள அந்த பணிப்பெண்ணின் குடும்பத்தினர் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டதால், பணம் கேட்டு, கடந்த ஆண்டு மே மாதம், அவரைத் தொலைபேசியில் தொடர்புக் கொண்டனர்.

இதையடுத்து, என்ன செய்வது என்று அறியாமல், கோ ஜெக் கியோவின் வங்கி ‘ATM’ கார்டின் ‘PIN’ எண்கள் நன்றாகத் தெரியும் என்பதால், அந்த ‘ATM’ கார்டைத் திருடினார். பின்னர், அந்த ‘ATM’ காரடைப் பயன்படுத்தி, சுமார் 20,000 சிங்கப்பூர் டாலருக்கு மேல் பணம் எடுத்துள்ளார். சுமார் 23 முறை ‘ATM’- ல் கார்டைப் பயன்படுத்தி, இந்த பணத்தை பணிப்பெண் எடுத்துள்ளார். பின்னர், பணத்தின் ஒருபகுதியை தனது குடும்பத்திற்கு அனுப்பிவிட்டு, மீத பணத்தில் நகைகளை வாங்கியுள்ளார்.

மேலாடை, முகக்கவசம் இன்றி இரண்டு ஆண்கள் மதுவுடன் விமானத்தில் ‘பார்ட்டி’- விசாரணையைத் தொடங்கியது ஸ்கூட்!

மூதாட்டியின் வங்கிக் கணக்கும், அவரது மகளின் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டிருந்த நிலையில், பணிப்பெண் பணத்தை எடுத்தது, அவரது முதலாளிக்கு தெரிய வந்தது. இதையடுத்து, பணிப்பெண் மீது காவல் நிலையத்தில் யே பெய் ஹுங் புகார் செய்தார். அதன் அடிப்படையில், பணிப்பெண் ‘Wimie Pascual Gubaton’- யை காவல்துறையினர் கைது செய்தனர்.

அதைத் தொடர்ந்து, பணிப்பெண்ணை காவல்துறையினர் நேற்று (04/01/2022) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது, தான் முதலாளியின் நியாபக மறதியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டேன். குடும்ப கஷ்டம் காரணமாக, ‘ATM’ கார்டைத் திருடிப் பணத்தை எடுத்துக் கொண்டேன் என்று குற்றத்தை ஒப்புக் கொண்டார். மேலும், காவல்துறையை அழைத்து 3,200 சிங்கப்பூர் டாலரைத் திருப்பிக் கொடுத்தார்.

சிங்கப்பூர் பாதுகாப்புத்துறை அமைச்சரைச் சந்தித்த இந்தோனேசிய விமானப் படையின் தலைமைத் தளபதி!

இதையடுத்து, பணிப்பெண்ணுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும், பணிப்பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை கடந்த ஆண்டு அக்டோபர் 17- ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமஸ்தா மற்றும் மற்ற வேலைகளில் பணிபுரியும் நபர்கள் தங்களது முதலாளியிடம் இருந்து திருடினால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.