கோவிட்-19 தடுப்பூசியின் சுமார் 500,000 டோஸ்களை சிங்கப்பூருக்குத் திருப்பி அனுப்பிய ஆஸ்திரேலியா!

Pic: REUTERS/Edgar Su

ஆஸ்திரேலியா, ஃபைசர்-பயோஎன்டெக் (Pfizer-BioNTech) கோவிட்-19 தடுப்பூசியின் சுமார் 500,000 டோஸ்களை சிங்கப்பூருக்குத் திருப்பி இன்று (நவ. 18) அனுப்பியது.

இது கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட பகிர்வு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை

அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆஸ்திரேலியாவின் தடுப்பூசி செயல்முறையை விரைவுபடுத்த உதவுவதற்காக சிங்கப்பூர் சுமார் 500,000 டோஸ் mRNA தடுப்பூசியை கடந்த செப்டம்பர் 2 அன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியது.

“ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய டோஸ்கள், சிங்கப்பூரின் மக்கள்தொகையில் தகுதியான பிரிவினருக்கு COVID-19 பூஸ்டர் தடுப்பூசிகளை வழங்குவதற்கான தற்போதைய திட்டத்திற்கு உதவும்” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) தெரிவித்துள்ளது.

இந்த பகிர்வு ஏற்பாடு சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாகவும் MFA கூறியுள்ளது.

மேலும், இதனை செயல்படுத்த இரு நாடுகளின் சுகாதார மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நெருக்கமாக பணியாற்றியதாக MFA கூறியது.

VTL பயணம்: நடைமுறை நுழைவுத் தேவைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தல்