சென்னையில் ‘அயலகத் தமிழர் தினம்- 2024’ விழா தொடக்கம்!

சென்னையில் 'அயலகத் தமிழர் தினம்- 2024' விழா தொடக்கம்!
Photo: TN Govt

 

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற ‘அயலகத் தமிழர் தினம் – 2024’ விழாவை இன்று (ஜன.11) காலை 10.00 மணிக்கு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு

‘தமிழ் வெல்லும்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மூன்றாம் ஆண்டாக நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்- 2024’- ல் கண்காட்சியினையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

விழாவில், உலகம் முழுவதும் உள்ள 100- க்கும் மேற்பட்ட தமிழ் சங்கத்தினர், தமிழறிஞர்கள், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நாளை (ஜன.12) நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றவிருக்கிறார்.

ஜொகூர் பாரு-சிங்கப்பூர் இடையே விரைவு ரயில் பாதை: வெறும் 5 நிமிடத்தில் இருநாடுகளுக்கும் பயணிக்கலாம்

இந்த விழாவில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, அயலகத் தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி, பொதுத் துறை செயலாளர் நந்தகுமார், இ.ஆ.ப., அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்