இந்தியாவின் 75- வது சுதந்திர தின கொண்டாட்டம்: வினாடி- வினா போட்டியில் பங்கேற்க வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு!

Photo: HCI

இந்தியாவின் 75- வது சுதந்திர தினத்தையொட்டி, ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ (Azadi ka Amrit Mahotsav) என்ற ‘அமுத பெருவிழா’ இந்தியா முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15- ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என இந்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவின் 75- வது சுதந்திர தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

டிச.26 முதல் உட்லண்ட்ஸ் பேருந்து சேவைகளின் வழித்தடங்கள் மீண்டும் துவங்குதல்!

இந்த நிலையில், சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் (High Commission of India in Singapore) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை நினைவுக்கூறும் வகையில், ‘ஆசாதி கா அம்ருத் மகோத்சவ்’ வினாடி-வினா, வெளிநாட்டு வாழ் இந்திய இளைஞர்கள் (Overseas Indian Youth) மற்றும் வெளிநாட்டினரை (Foreign Nationals) இந்தியா பற்றிய அறிவை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுகிறது. வினாடி- வினா போட்டியில் மூன்று வகையான பங்கேற்பாளர்கள் பங்கேற்கலாம். அதன்படி, NRIs, OCI, PIOs மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் (Foreign Nationals) ஆகியோர் பங்கேற்கலாம்.

1987- ஆம் ஆண்டு ஜனவரி 1- ஆம் தேதி அன்று அல்லது அதற்கு பிறகு மற்றும் 2005- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன் பிறந்த வெளிநாட்டினர் இப்போட்டியில் பங்கேற்க இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதிவு கடந்த டிசம்பர் 1- ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில், அடுத்தாண்டு ஜனவரி 31- ஆம் தேதி வரை நடைபெறும். வினாடி- வினா (Quiz) தலைப்புகள் மற்றும் விண்ணப்பிப்பதற்கு https://akamquiz.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் முதல் மூன்று பேருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.