சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் – ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்கு கூடுதலான போனஸ் - ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்
(Photo: Pixabay)

சிங்கப்பூரில் பிறந்த குழந்தைகளுக்காக வழங்கப்படும் கூடுதலான போனஸ் தொகை ஆகஸ்ட் மாதத்திலிருந்தே வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு அடுத்த ஆண்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட கூடுதல் போனஸ் தொகை இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே வழங்கப்படும்.

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கிய விமானம் – கடும் வெப்பம் தான் காரணம்

இதனால், பிப்ரவரி 14, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த தகுதியுள்ள அனைத்து சிங்கப்பூர் குழந்தைகளுக்கும் இந்த கூடுதல் போனஸ் கிடைக்கும்.

குழந்தைகள் மேம்பாட்டு கணக்கின் (CDA) முதல் மானியம் S$3,000 இலிருந்து S$5,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பிப். மாதம் துணைப்பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் முதல் மற்றும் இரண்டாவது குழந்தைகளுக்கு தலா S$11,000 மற்றும் அவர்களின் மூன்றாவது மற்றும் அடுத்தடுத்த குழந்தைகளுக்கு தலா S$13,000 குழந்தை போனஸ் பணப் தொகைகளை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மேலும் விவரங்களை அறிய 1800 111 2222 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது http://www.babybonus.msf.gov.sg/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

“வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதை செய்தாக வேண்டும்” – நாளுக்கு நாள் வலுக்கும் கோரிக்கை