பாங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!

பாங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்களின் கவனத்திற்கு!
Photo: Tik Tok Video

 

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள மால் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

‘சந்திர கிரஹணம்’- இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அக்டோபர் 3- ஆம் தேதி அன்று தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சியாம் பாராகான் மாலில் (Siam Paragon Mall) நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம். இந்த சம்பவத்தால் சிங்கப்பூர் கவலையடைந்துள்ளது.

பாங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம், தாய்லாந்தில் உள்ள சிங்கப்பூரர்களைத் தொடர்புக் கொண்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சிங்கப்பூரர்கள் யாராவது காயமடைந்தார்களா (அல்லது) பாதிக்கப்பட்டார்களா என்பதை அறிய உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை.

“10 ஆண்டுகளாக வேலை செய்கிறேன்.. இப்போதுதான் சிங்கப்பூரை சுற்றிப்பார்த்து இருக்கிறேன்” – வெளிநாட்டு ஊழியர்களின் சுற்றுலா

பாங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், உள்ளூர் செய்திகளை உன்னிப்பாகக் கவனிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தாய்லாந்துக்கு செல்லும் சிங்கப்பூரர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் https://eregister.mfa.gov.sg என்ற இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்துக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

தூதரக உதவி தேவைப்படும் பாங்காக்கில் உள்ள சிங்கப்பூரர்கள், பாங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தையோ அல்லது 24 மணிநேரம் செயல்படும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:

“ஊழியர்களுக்கு முறையான காலணிகள் இல்லை, விழுந்து காயம் ஏற்படும் அபாயம் அதிகம்” – சிக்கிய 435 நிறுவனங்கள்

பாங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

129 தெற்கு சாத்தோர்ன் சாலை, பாங்காக்-10120,
தொலைபேசி எண்: +66-81-844-3580,
மின்னஞ்சல் முகவரி: singemb_bkk@mfa.sg.

24 மணி நேரமும் செயல்படும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை:

தொலைபேசி எண்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.