சிங்கப்பூரில் நிர்வாணமாக பின்னோக்கி நடந்துசென்ற ஆடவர் கைது!

Bedok North naked man arrested
(Photo: Mothership reader)

ஆடவர் ஒருவர் நிர்வாணமாக நேற்று டிசம்பர் 2ஆம் தேதி பெடோக் (Bedok) பகுதியில் சுற்றித் திரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Mothership இணைதளத்தில் இடம்பெற்றுள்ள காணொளியில், ஒரு வயதான ஆடவர் நிர்வாணமாக நடந்து செல்வதைக் காணமுடிகிறது. அதாவது, அந்த ஆடவர் வித்தியாசமாக முறையில் பின்னோக்கி நடப்பதை நாம் காணமுடிகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் புதிய கிருமித்தொற்று!

ஆடை இல்லாமல், அந்த ஆடவர் போக்குவரத்து சந்திப்பிலிருந்து குடியிருப்பு பகுதிக்கு பின்னோக்கி நடந்து சென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “சிங்கப்பூரில் இதுபோன்ற ஒரு சம்பவத்தை தான் பார்த்தது இதுவே முதல் முறை” என்று Mothership வாசகர் கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை 5:03 மணியளவில் பிளாக் 89 பெடோக் நார்த் ஸ்ட்ரீட் 4இல் உதவி கோரி அழைப்பு வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்நிலையில், பொது இடத்தில் நிர்வாணமாக தோன்றியதற்காக அந்த 57 வயது ஆடவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக 4 பேர் நுழைய உதவி – சந்தேகத்தின் பேரில் தொற்று நோயாளி கைது

வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 10 பேர் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…