வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 10 பேர் கைது!

COVID-19 breaching measures investigate

உரிமம் இல்லாத பொது பொழுதுபோக்கு நிலையத்தில், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு இணங்க தவறியதாக 24 பேர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றைய (டிசம்பர் 2) ஊடக வெளியீட்டில், நவம்பர் 26ஆம் தேதி ஜென்டிங் (Genting) லேனில் அமைந்துள்ள விற்பனை நிலையத்தில் அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 33 லட்சம் பேர் இந்தியாவிற்கு வருகை!

COVID-19 தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறியதாக விசாரிக்கப்பட்ட 13 ஆடவர்கள் மற்றும் 11 பெண்கள் தவிர, வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் 10 பெண்களை காவல்துறை கைது செய்தது.

மேலும், 3 பெண்கள் சிங்கப்பூரில் அனுமதிக்கப்பட்ட காலத்திற்குமேல் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதில் 23 மற்றும் 25 வயதுடைய இரண்டு ஆடவர்கள், பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறியதற்காக விசாரிக்கப்படுவார்கள்.

சட்டம்

உரிமம் இல்லாமல் பொது பொழுதுபோக்கு மற்றும் மதுபானங்களை வழங்கியதாகக் குற்றம் கண்டறியப்பட்டால், இருவருக்கும் S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

COVID 19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ், குற்றவாளிகளுக்கு S$10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டால், S$20,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

IKEA சிங்கப்பூரின் அதிரடி விலையில் ஆடைகள் விற்பனை!

சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் முதலீடுகள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…