சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக 4 பேர் நுழைய உதவி – சந்தேகத்தின் பேரில் தொற்று நோயாளி கைது!

genitals exposing man arrest

COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட வெளிநாட்டு ஆடவர், சட்டவிரோத நுழைவுக்கு உதவி செய்த சந்தேகத்தின் பேரில் கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதில் நான்கு பேர் படகில் இருந்து குதித்து சிங்கப்பூருக்கு நீந்தி வந்தது கண்டறியப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர் வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் 10 பேர் கைது!

சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவான 10 புதிய COVID-19 சம்பவங்களில் 43 வயதான இந்த இந்தோனேசிய ஆடவரும் ஒருவர்.

அவர் சிறப்பு அனுமதி வைத்திருப்பவர் என்றும், முந்தைய வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டதற்காக கடலோர காவல்படையால் அவர் கைது செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 29 அன்று அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபரில் நான்கு இந்தோனேசிய ஆடவர்கள் சட்டவிரோதமாக நுழைவதற்கு உதவியதற்காக சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நான்கு ஆடவர்களுக்கும் அக்டோபர் 10ம் தேதி சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

அவர் சென்று திரும்பிய இடங்களில் துப்புரவு மற்றும் கிருமிநீக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 33 லட்சம் பேர் இந்தியாவிற்கு வருகை!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…