ரகசிய தகவல்களை பெற பொதுமக்களை ஏமாற்றும் போலி காவல்துறை வலைத்தளம் – எச்சரிக்கை!

Beware of fake police website
Beware of fake police website (Photo: Singapore Police Force)

சிங்கப்பூரில், ரகசிய தகவல்களை பெற பொதுமக்களை ஏமாற்றும் போலி காவல்துறை வலைத்தளம் குறித்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதில் போலி சிங்கப்பூர் காவல் படை (SPF) வலைத்தள மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அறிக்கையில் அது கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் இரண்டு வேலையிட மரணங்கள்

அந்த போலி விண்டோ திரை ஒரு படத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. அது ஒரு படம் என்பதால், கிளிக் செய்யவோ அல்லது பிற பயன்பாடுகளை மூடவோ / திறக்கவோ முடியாது.

அதில் SPF இணையத்தள முகவரியும் உண்மையான முகவரி போல் காட்சியளிக்கும். மேலும் அதில் பாதிக்கப்பட்டவர்களின் Web Browser சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.

இது Web Browser-யை திறக்க அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்படும், அதற்காக கிரெடிட் கார்டு விவரங்களை [ அட்டை எண், பெயர், காலாவதி தேதி மற்றும் அட்டை சரிபார்ப்பு மதிப்பு (CVV)] உள்ளிடுமாறு கேட்கப்படும்.

அந்தத் தகவல்கள் கொடுக்கும் பட்சத்தில் மோசடி கும்பல் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை செய்யலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை கூறுகையில், தனி நபர்களின் Web Browser-யைக் காவல்துறை தடை செய்யாது என்றும், அதே போல அதன் இணையத்தளங்களில் வங்கி அல்லது வங்கி அட்டை விவரங்கள் கேட்கப்பட மாட்டாது என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

வேலை அனுமதி உடையவர்கள் வசிப்பிடம் இல்லாமல் வெளியில் உறங்குவதில்லை – மனிதவள அமைச்சு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…