சிங்கப்பூருக்கான புதிய அமெரிக்க தூதர் நியமனம்!

Photo: THE WHITE HOUSE

 

சிங்கப்பூர் நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை நியமித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் (US President Joe Biden) பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை (White House) நேற்று முன்தினம் (29/07/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழில்முனைவோரான ஜோனத்தன் எரிக் கப்லானை (Jonathan Eric Kaplan) சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக நியமித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கான புதிய அமெரிக்க தூதர் குறித்துப் பார்ப்போம்
தொழில்முனைவோரான ஜோனத்தன் எரிக் கப்லான், அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் ஒன்றான கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் (Carnegie Mellon University) தொழில்துறை மேலாண்மையில் இளங்கலை அறிவியல் பட்டம் (Bachelor of Science Degree in Industrial Management) பெற்றார். இவர் ஃபிஷ்சிக்ஸ் உணவகக் கழகத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் (CEO of FishSix Restaurant Corporation) பணியாற்றினார்.

முதல் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், வியட்நாமிற்கு வருகை தரவுள்ள அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்!

அதற்கு முன், ‘Pure Digital Technologies’ தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அவர், ஃபிளிப் வீடியோ கேமராவை (Flip video camera) கண்டுபிடித்துச் சந்தைப்படுத்தினார். மேலும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் (Cisco Systems) மூலம் ‘Pure Digital Technologies’ வாங்கிய போது, ​​கப்லான் அதன் நுகர்வோர் பொருட்கள் பிரிவின் மூத்த துணைத் தலைவராகவும், பொது மேலாளராகவும் இருந்தார்.

கப்லான் தற்போது ‘கல்விசூப்பர்ஹைவே’ (Chairperson Of EducationSuperHighway) என்ற இலாப நோக்கற்ற அமைப்பின் (Non- Profit Organisation) தலைவராக உள்ளார். இந்த அமைப்பு அமெரிக்காவில் உள்ள பொதுப் பள்ளி வகுப்பறைகளுக்கு அதிவேக இணைய இணைப்புகளை (High-Speed Internet Connections) வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதேபோல், ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளுடன் (Governors and Officials) இணைந்து இந்த அமைப்பு செயல்படுகிறது.

சொந்த நாட்டுக்கு திரும்பிய வெளிநாட்டு ஊழியர்களால் மொத்த வேலைவாய்ப்பு சரிவு

மேலும், கப்லான் பல்வேறு நிறுவனங்களிலும் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு, Sega.com-ன் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (President and CEO of Sega.com), மூவிஸ்ட்ரீட்டின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (Founder and CEO of MovieStreet), ஜியோவொர்க்ஸின் துணைத் தலைவர் மற்றும் பொதுமேலாளர்(Vice President and General Manager of Geoworks), ஹேண்ட்ஸ் ஆன் டெக்னாலஜியின் (Vice President of Hands On Technology) துணைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அவர் கடந்த 2010- ஆம் ஆண்டு எர்ன்ஸ்ட் & யங் வடக்கு கலிபோர்னியா தொழில் முனைவோர் விருதை (2010 Ernst & Young Northern California Entrepreneur of the Year award) வென்றார்.

இந்த நிலையில், 50 வயது மதிப்புத்தக்க ஜோனத்தன் எரிக் கப்லான் தற்போது சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.