18 முதல் 49 வயதுடையவர்கள் ரெடியா.. உங்களுக்கும் கூடுதல் டோஸ் தடுப்பூசி

Pic: AFP/Roslan Rahman

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் 18 முதல் 49 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சகம் (MOH) திட்டமிடுகிறது.

Bivalent தடுப்பூசிகள் அதிக அளவில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிலையில், ஆண்டின் பிற்பகுதியில் அவர்களுக்கு தடுப்பூசி போட அழைப்பு விடுக்கப்படும் எனவும் MOH குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத பாலியல் சேவை… 13 பெண்கள் அதிரடி கைது

மேலும் இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஓங் யீ குங் கூறுகையில்; சில வாரங்களில் தடுப்பூசி மருந்துகள் போதிய அளவில் கிடைக்கும் என்று நம்புகிறோம், என்றார்.

நேற்று அக்டோபர் 20 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய ஓங், 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளதால் Bivalent தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறினார்.

எனவே தகுதியுடையவர்கள் தடுப்பூசி போட்டுய்கொள்ள வேண்டும் என் சிங்கப்பூர் அரசாங்கம் பரிந்துரைக்கிறது, என்றார்.

லிட்டில் இந்தியாவில் மது அருந்தத் தடை.. மீறினால் அபராதம், சிறை