ஹவ்காங் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து….130 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்!

Photo: SCDF Official Facebook Page

மார்ச் 12- ஆம் தேதி அன்று இரவு 08.55 PM மணிக்கு சிங்கப்பூரில் உள்ள ஹவ்காங் அவென்யூ 4- ல் அமைந்துள்ள புளோக் 603- ன் (Block 603 Hougang Ave 4) நான்காவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தகவல் தெரிவிக்கப்பட்டது.

திருப்பி பெறப்பட்ட சுமார் 6,00,000 TraceTogether கருவிகள்

இதையடுத்து, தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த 130 குடியிருப்பாளர்களைப் பத்திரமாக வெளியேற்றினர்.

பின்னர், தீயணைப்பு வீரர்களின் ஒரு பிரிவினர் தண்ணீர் வேகமாகப் பீய்ச்சி அடித்து, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து, அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்ட வீட்டிற்குள் நுழைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த வீட்டிற்குள் சென்று தீயை முற்றிலும் அணைத்தனர். வீட்டின் படுக்கையறையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், பின்னர் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$5.8 மில்லியன் ஹிமாலய பரிசை தட்டி சென்ற ஒரே ஒருவர்!

அந்த வீட்டில் வசித்து வந்த முதிய தம்பதி, அதிகாரிகள் வருவதற்கு முன்னரே வெளியேறியதாக தகவல் தீயணைப்பு வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தில் புகையை சுவாசித்த நான்கு பேருக்கு SCDF- ன் துணை மருத்துவர் சிகிச்சை அளித்தார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்த விசாரணையானது நடைபெற்று வருகிறது.