மலேசியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய 4 நிறுவனங்களுக்கு தடை..!

blocked from importing eggs from Malaysia after failing licensing requirement
File Photo: Eggs

சிங்கப்பூரில் நான்கு முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு ஜூலை 20 முதல் மலேசியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உரிம விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மொத்த முட்டை விநியோகத்தில் அவர்களின் பங்கு சுமார் 30 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் இருந்து தமிழகத்திற்கு சிறப்பு விமானம் மூலம் சுமார் 177 பேர் சென்றனர்..!

இருப்பினும், முட்டையை முன்கூட்டியே வாங்கி பதுக்கவோ அல்லது தடை காரணமாக பீதியடையவோ தேவையில்லை என்று சிங்கப்பூர் உணவு ஆணையம் தெரிவித்துள்ளது.

ஏனெனில், 32 பிற முட்டை இறக்குமதி நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றனர். மேலும், சிங்கப்பூர் பண்ணைகள் கடந்த ஆண்டு நாட்டின் மொத்த முட்டை விநியோகத்தில் சுமார் 26 சதவீதத்தை உற்பத்தி செய்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான முட்டை இறக்குமதி நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து இறக்குமதி செய்ய முடியும் என்பதால் நுகர்வோருக்கு வழக்கமான தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு முட்டை இருக்கும் என்றும், மேலும் சந்தையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றும் ஆணையம் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் முட்டை வழங்கல் மற்றும் தொழில்துறையின் திறனை மேம்படுத்துவது அவசியம் என்று ஆணையம் கூறியுள்ளது, ஏனெனில் முட்டைகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க : நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg