நான்கு மடங்கு வேகத்தில் COVID-19 சோதனை முடிவுகள் – சிங்கப்பூர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

Singapore scientists develop COVID-19 test method that delivers results in 36 minutes
Singapore scientists develop COVID-19 test method that delivers results in 36 minutes (Photo: NTU Singapore)

சிங்கப்பூரில் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (NTU) விஞ்ஞானிகள் COVID-19 சோதனை முடிவுகளை சுமார் நான்கு மடங்கு வேகத்தில் பெறுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

COVID-19 தொற்றை கண்டறிவதற்கான இந்த மேம்பட்ட சோதனை முறை மூலம் 36 நிமிடங்களில் முடிவுகளை பெற முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியது..!

சிறிய உபகரணங்களுடன் சோதனை செய்ய முடியும் என்றும் சமூகத்தில் பரிசோதனை கருவியாக பயன்படுத்தப்படலாம் என்றும் NTU திங்களன்று (ஜூலை 27) கூறியுள்ளது.

சிங்கப்பூரில் பெரிய நோய்ப்பரவல் அபாயங்கள் உருவாகுவதைத் தடுக்க, தனிமைப்படுத்துதல் மற்றும் பரிசோதனை ஒரு முக்கிய நடவடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போதைய சோதனை முறைக்கு அதிக பயிற்சி பெற்ற தொழில்நுட்ப ஊழியர்கள் தேவைப்படுவதாகவும், இறுதி முடிவுகள் முடிவடைவதற்கு சில மணிநேரங்கள் ஆகலாம்.

NTU இன் Lee Kong Chian School of Medicine விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த புதிய முறை, COVID-19 ஆய்வக சோதனைகளின் வேகம், கையாளும் நேரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு வழியை நிரூபித்துள்ளது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை பயன்படுத்தி டெங்கு உட்பட மற்ற நோய்களையும் கண்டறிய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg