ஆட்குறைப்பை மேற்கொள்ளும் நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் – NTUC..!

NTUC calls on firms to observe responsible retrenchment practices (Photo: REUTERS)

தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும் நியாயமான மறுசீரமைப்பு கட்டமைப்பை பரிந்துரைத்துள்ளது.

மேலும், ஆட்குறைப்பால் பாதிக்கப்படும் ஊழியர்களை நியாயமான முறையில் நடத்துவதை உறுதி செய்வதற்கு நியாயமான ஆட்குறைப்பு கட்டமைப்பையும் முன்மொழிகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 4 வயது சிறுமியை கொலை செய்து சடலத்தை அப்புறப்படுத்தியதாக இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு..!

சிங்கப்பூரின் தொடர்ச்சியான பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் எதிர்வரும் மாதங்களில் கூடுதலான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுவதாக, NTUC அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அண்மையில் Resorts World Sentosa நிறுவனம் சுமார் 2,000 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்ததாக ஊடகங்கள் குறிப்பிட்டு இருந்தன.

மேலும் தனித்துவம் பெற்று, முக்கிய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்களை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அந்த வழிகாட்டிமுறை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

அதாவது தேவைக்கு அதிக ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள், ஆட்குறைப்பு செய்ய முற்படும் போது அவர்களின் திறன், அனுபவம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி நடவடிக்கையாகவே ஆட்குறைப்பு இருக்க வேண்டும் என்பதை தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வலியுறுத்தி கூறியுள்ளது .

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அடுத்த மாதம் முதல் கொரோனா இருக்காது.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg
?? Sharechat  https://sharechat.com/tamilmicsetsg