சிங்கப்பூரில் “O வகை இரத்தம்” தேவை – நன்கொடையாளர்கள் முன்வருமாறு வேண்டுகோள்

blood donation

சிங்கப்பூரில் “குரூப் O” வகை இரத்த இருப்பு குறைவாக இருப்பதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (SRC) மற்றும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) நேற்று (ஜனவரி 25) தெரிவித்தன.

குரூப் O வகை இரத்தம் சிங்கப்பூரில் முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே நன்கொடையாளர்கள் முன்வந்து தானம் செய்யுமாறு அவை கேட்டுக்கொண்டன.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்த இரத்த வகை அதிகம் பயன்படுவதாகவும், இரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் நோயாளிகளின் இரத்த வகை என்னவென்று தெரியாதபோது O வகை இரத்தம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

மேலும், இரத்தம் தேவைப்படும் சிங்கப்பூர் நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் O வகை இரத்தத்தைக் கொண்டுள்ளனர்.

ஆகவே, சிங்கப்பூரில் நன்கொடைகள் மூலம் மட்டுமே இரத்த இருப்பை நிரப்ப முடியும்.

O+ மற்றும் O- இரத்த வகை கொண்ட 16 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள நன்கொடையாளர்கள் முன் வந்து தங்கள் இரத்தத்தை தானம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நன்கொடையாளர்கள் குறைந்தபட்சம் 45 கிலோ எடையுடன் இருக்க வேண்டும்.

தானம் செய்ய: https://www.hsa.gov.sg/blood-donation/where-to-donate

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு