சிங்கப்பூரில் Blood moon என்னும் சிவப்பு நிலா சந்திர கிரகணம்: எங்கே காணலாம்?

Blood moon with total lunar eclipse
NASA

சிங்கப்பூரில் Blood moon என்னும் சிவப்பு நிலா சந்திர கிரகணம் இன்று நவம்பர் 8, 2022 தெரியும் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி சந்திர கிரகணம் மாலை 4:02 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்… பதறிய புலம்பெயர்ந்த 300 பேர் – விரைந்து சென்று காப்பாற்றிய சிங்கப்பூர் அதிகாரிகள்

பின்னர் மாலை 5:09 மணிக்கு பகுதியாக தோன்றும், இறுதியாக மாலை 6:16 மணிக்கு முழு கிரகணம் தென்படும் என்று ஃபேஸ்புக் பதிவில் அறிவியல் ஆய்வகம் (Science Centre OBservatory) தெரிவித்துள்ளது.

ஆனால், சிங்கப்பூரில் மாலை 6.46 மணிக்குத்தான் சந்திரன் உதயமாகும் என்பது கூடுதல் செய்தி.

இருப்பினும் இரவு மணி 7.41 வரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும் என்றும் கணித்து கூறப்பட்டுள்ளது.

எங்கே காணலாம்?

கிழக்கு அடிவானம் தெரியும் பகுதியில், தடங்கல் இல்லா இடத்தில் எங்காவது செல்வதன் மூலம் அதனை பார்க்கும் வாய்ப்புகளை நீங்கள் பெறலாம்.

சிராங்கூன் சாலை தீபாவளி பண்டிகை ஒளியூட்டு அலங்கரிப்பில் தீ விபத்து