கடலில் மூழ்க தொடங்கிய கப்பல்… பதறிய புலம்பெயர்ந்த 300 பேர் – விரைந்து சென்று காப்பாற்றிய சிங்கப்பூர் அதிகாரிகள்

Singapore exports rebound
(Photo from Asiatec Website)

புலம்பெயர்ந்த நபர்கள் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பயணித்து வந்த படகு மூழ்கத் தொடங்கியதை அடுத்து அந்த 300 பேர் மீட்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சிராங்கூன் சாலை தீபாவளி பண்டிகை ஒளியூட்டு அலங்கரிப்பில் தீ விபத்து

படகில் இருந்த இலங்கை நாட்டவர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடற்படையை தொடர்பு கொண்டு தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் கடற்படை பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

பின்னர் படகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரையும் வியட்நாம் நோக்கி அழைத்து செல்வதாகவும் சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.

சிங்கப்பூரில் கனமழை எச்சரிக்கை: பல இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம்